பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரி யார்ன்னு தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் தினமும் ஒளிப்பரப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சஞ்சீவ் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் வழக்கம் போல வைல்ட் கார்டு என்ட்ரியாக ஒருவர் வீட்டிற்குள் நுழைய இருக்கிறார்.
இந்நிலையில், தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஜய் அவர்களின் தோழனும், சீரியல் நடிகருமாகிய சஞ்சீவ் தான் பிக்பாஸ் வீட்டுற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக முதலில் உள்ளே நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.