"வளர்ப்பு பத்தி பேசிட்டாங்க" - பிக்பாஸில் கதறி அழுத சுருதி, பவானி ரெட்டி
பவானி ரெட்டி, இசைவாணி, தாமரைச் செல்வி ஆகிய 3 பேரும் இந்த வாரம் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 3 பேரும் நாணயங்களை உபயோகிக்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், தாமரைச் செல்வியிடம் இருக்கும் நாணயத்தை சுருதி திருடியதால் பிக் பாஸ் வீட்டில் பூகம்பமே வெடித்திருக்கிறது. இன்று காலை தாமரைச் செல்வியிடம் இருக்கும் நாணயத்தை சுருதி எடுத்து தன்வசமாக்கிக் கொள்வது போலவும், அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுவது போலவும் புரோமோ வெளியானது.
தாமரைச் செல்வி உபயோகித்த கடுமையான வார்த்தைகளால் மனமுடைந்த பவானி ரெட்டியும், சுருதியும் கண் கலங்குவது போல தற்போது மற்றொரு புரோமோ வெளியாகி இருக்கிறது.
இதோ அந்த புரொமோ -
#Day23 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #LiftOnVijayTelevision pic.twitter.com/BDpo0v6ab3
— Vijay Television (@vijaytelevision) October 26, 2021