'நடிகை யாஷிகாவால் தான் நான் இங்க இருக்க...' - நிரூப் நந்தகுமாரின் பிக்பாஸ் ப்ரோமோ வைரல்!

cinema-bigboss
By Nandhini Oct 14, 2021 04:20 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 5 கடந்த 3ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியிலிருந்து திடீரென்று விலகினார்.

இதனால் தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில், பவானி ரெட்டி மற்றும் தாமரை செல்வியை தவிர மற்றவர்கள் இந்த முதல் வார எவிக்சன் லிஸ்டில் இடம்பெற்றனர்.

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் நிரூப் நந்தகுமார், யாஷிகாவால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்று எல்லாரும் சொல்லுறாங்க.

அவளால் தான் நான் இங்க இருக்கேன் என்று சொல்ல பெருமைப்படுகிறேன். எனக்கு இந்த இண்டஸ்ட்ரியில் கான்டாக்சே கிடையாது. ஒரு பெண்ணால ஒரு ஆண் வெற்றி பெற கூடாதா? ஒரு பெண் வெற்றிக்கு பின்னாடி ஆண் இருக்கும் போது, ஆண் வெற்றிக்கு பின்னாடி ஒரு பெண் இருக்க கூடாதா? என்று கேள்வி எழுப்ப, அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்துவது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.

இதோ அந்த ப்ரொமோ -