உன் நிலைமைக்கு காரணமானவர்கள் பாவங்களை சேர்த்து வைத்துள்ளார்கள் - அபிஷேக் ஆறுதல்

அபிஷேக் தாமரை செல்வியிடம் உன் மகன் கண்டிப்பாக உன்னிடம் வருவான் என ஆறுதல் கூறியுள்ளது 3-வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை நிகழ்வை கூறி வருகிறார்கள். இந்நிலையில், இன்று தாமரைச்செல்வி தனது கடந்த கால வாழ்க்கை நிகழ்வு குறித்து பேசினார்.

இவர் தனது வாழ்க்கை நிகழ்வு குறித்து கூறியது முதல் ப்ரோமோவில் வெளியானது. தற்போது, அபிஷேக் தாமரை செல்விக்கு ஆறுதல் கூறுவது போன்ற 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில், நிச்சயமாக உன் மகன் உன்னிடத்தில் வருவான். உனது இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் வாழ்க்கையில் பல பாவங்களை சேர்த்து வைத்துள்ளார்கள் என கூறுகிறார். அதற்கு தாமரைச் செல்வி தேம்பி தேம்பி அழுகிறார்.

இதோ அந்த வீடியோ - 


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்