என் மகனை காப்பாற்றத்தான் நான் பிக்பாஸுக்கு வந்தேன் - பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத தாமரை

என் மகனை காப்பாற்றதான் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தேன் என்று தாமரை கதறி அழுதிருக்கிறார். விஜய் டிவியில், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ம் தேதியிலிருந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து சொல்லி வருகிறார்கள். நேற்று அக்ஷரா, சிபி, பிரியங்கா ஆகியோர் கூறியிருந்தனர்.

இதனையடுத்து, இன்று தாமரை செல்வி தனது வாழ்க்கையில் தான் கடந்து வந்த பாதை குறித்து கூறி இருக்கிறார். அப்போது, தனது மகனை பார்த்து 4 மாதங்கள் ஆகிவிட்டது, அவன் தன்னை தவறாக புரிந்து கொண்டுள்ளான், இந்நிகழ்ச்சிக்கு நான் வந்ததே அவனை காப்பாற்ற தான் என்று கூறி அழுத புரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

இதோ அந்த வீடியோ -     


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்