மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ள நமீதா - வெளியானது புதிய தகவல் - ரசிகர்கள் மகிழ்ச்சி

cinema-bigboss
By Nandhini Oct 12, 2021 02:43 AM GMT
Report

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதாக கூறப்படும் நமீதா, மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 5வது சீசன் கடந்த வாரம் தொடங்கி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் கலந்துக் கொண்டார். இதற்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். முதல் நாளிலிருந்து போட்டியாளர்கள் தங்களை அறிமுகப்படுத்தி வந்தார்கள்.

அந்த வகையில் திருநங்கை நமிதா மாரிமுத்து, தனது வாழ்க்கையில் நடந்தவற்றை கண்ணீருடன் சொல்லி, போட்டியாளர்களை அழுத வைத்தார். இந்த சமுதாயத்தில் எல்லாரும் திருநங்கைகளை பாலியல் தொழில் செய்பவராகவும், பிச்சை எடுப்பவர்களாகவும் தான் பார்க்கிறார்கள் என்று கதறி கதறி அழுதபோது சக போட்டியாளர்கள் கண்களில் கண்ணீர் வடிந்தது. 

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். இதற்கு காரணம், தாமரையுடன் ஏற்பட்ட தகராறில், ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் என்றும், மருத்துவ காரணங்களால் வெளியேறினார் என்றும் தகவல் பரவி வருகிறது. ஆனால் உண்மையாக காரணம் என்ன என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நமீதா குறித்து புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி நமீதா மாரிமுத்து, இன்னமும் பிக்பாஸ் செட்டில் தான் இருக்கிறார் என்றம், அவர் விரைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல் வைல்டுகார்டு என்ட்ரியாக ஷாலு ஷம்மு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் நமீதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது ரசிகர்களிடையே அதிப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதனால், மீண்டும் நமீதாவை ரீ என்ட்ரி கொடுக்க வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ள நமீதா - வெளியானது புதிய தகவல் - ரசிகர்கள் மகிழ்ச்சி | Cinema Bigboss