3-வது நாளே மோதி கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ் - ‘பீக்பாஸ் 5 சீசன்’ ஆட்டம் ஆரம்பம்

cinema-bigboss
By Nandhini Oct 06, 2021 04:51 AM GMT
Report

விஜய் டிவியில் கடந்த 4 சீசன்களாக ‘பிக்பாஸ்’ வெற்றிகரமாக ஒளிப்பரப்பட்டது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 5 கடந்த ஆகஸ்டு 3ம் தேதியிலிருந்து ஆரம்பமானது.

இந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்துள்ளனர்.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில், நடிகர் இமான் தனது கதையை சொல்ல, நிரூப் நந்தகுமார் , நீங்க பேசும் போது சிரிச்சது தப்பா அண்ணே என்று கேட்க, அதற்கு தப்பே கெடையாதே என்று இமான் சொல்ல, சிபி சந்திரன் வாக்குவாதம் செய்வது போலவும், கடைசியில் நமீதா மாரிமுத்து, சண்ட ஆரம்பிக்க போது வீட்ல என்று சொல்வது போலவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ -     

3-வது நாளே மோதி கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ் - ‘பீக்பாஸ் 5 சீசன்’ ஆட்டம் ஆரம்பம் | Cinema Bigboss