ஆட்டம் அனலாய் இருக்கப்போகுதுங்கோ... - பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குள் நுழையப்போகும் போட்டியாளர்

Competitor Big Boss Ultimate hot star
By Nandhini Jan 25, 2022 05:56 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் ஆரம்பத்தில் 42 நாட்கள் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது 75 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல் போட்டியாளர்கள் எண்ணிக்கையும் 12 அல்லது 13 என சொல்லி விட்டு, தற்போது 16 ஆக உயர்த்தி உள்ளனர்.

இதில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருவதால், 24 மணி நேரமும் அடிதடி சண்டைக்கு பஞ்சமிருக்காது என்பது மட்டும் உறுதியாகி விட்டது. இதை சமீபத்தில் வெளியிடப்பட்ட பிக்பாஸ் அல்டிமேடிற்கான ப்ரமோவும் உறுதி செய்துள்ளது.

இதுவரை இறுதியான போட்டியாளர்கள் பட்டியலின் படி முதல் போட்டியாளர் சினேகன் என்பது உறுதியாகியுள்ளது.

அடுத்ததாக அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, சுஜாவருணி, அபினய் வட்டி, தாமரை செல்வி ஆகியோர் பங்கேற்க உள்ளார்களாம்.

சிபி பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகி உள்ளாராம்.

இதேவேளை, ஓவியா, வனிதா விஜயக்குமார், ஜுலி, தாடி பாலாஜி, யாஷிகா ஆனந்த் போன்றவர்கள் பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லையாம்.