Saturday, Jul 5, 2025

Viral Video : ரோட்டில் காதலியை சராமரியாக தாக்கிய காதலன்... - தட்டிக்கேட்ட பிரபல நடிகர்..!

Cinema Lead Tamil Cinema
By Nandhini 2 years ago
Report

தெலுங்கு நடிகர் நாக சவுர்யா, ரோட்டில் காதலி ஒருவரை காதலன் அடித்ததை தட்டிக்கேட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தட்டிக்கேட்ட இளம் ஹீரோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

ஐதராபாத்தில் பரபரப்பான சாலையில் வாலிபர் ஒருவர் இளம் பெண்ணை அடித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த நாக சவுர்யா ஓடி வந்து அதை அவைரை தட்டிக்கேட்டுள்ளார். மேலும் அப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்குமாறு வாலிபரிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபரோ கோபப்பட்டு, அவள் என் காதலி, என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று மறுத்துள்ளார்.

காதலியாக இருக்கலாம். ஆனால், அடிப்பது தவறு. உடனே மன்னிப்பு கேளு.. என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதைப்பார்த்த அப்பெண் தன் காதலரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது, நாக சவுர்யாவின் Phalana Abbayi Phalana Ammayi படம் மார்ச் 17ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ளார்.

மாளவிகா நாயர் நடித்துள்ளார். படம் ரிலீஸாவதால் விளம்பரம் தேடி தான் நாக சவுர்யா இப்படி செய்திருக்கிறாரோ என்றும் சிலர் பேசுகிறார்கள்.

ஒரு மனுஷன் நல்லது செய்தால் கூட அது பப்ளிசிட்டிக்காக என்று பேசுவது எல்லாம் ரொம்ப தப்பு என நாக சவுர்யாவின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.  

cinema-beats-girlfriend-in-public-naga-shaurya