அர்ஜுன் வெளியிட்ட ஒற்றைப் படம் - சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

cinema-arjun viral-photos
By Nandhini Dec 10, 2021 07:30 AM GMT
Report

தமிழ் திரையுலகில் 1990களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். இவர் தற்போது, ‘ஜீ’ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவரின் டுவிட்டர் பக்கத்தில் மறைந்த கன்னட சினிமாவின் டாப் நடிகரான புனித் ராஜ்குமாரை சிறுவயதில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "Some things just don’t sink in.. My dear Appu is eternal" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.