கல்யாண வீடியோவை வெளியிட்ட அமலாபால் - மகிழ்ச்சியில் திளைத்த ரசிகர்கள்!
திருமண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடிகை அமலாபால் வலம் வந்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2010ம் ஆண்டு மைனா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அவர் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனையடுத்து, விஜய், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். மேலும், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வந்துக் கொண்டிருக்கிறார்.
நடிகை அமலாபால், இயக்குனரான ஏ.எல். விஜய்யை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால், குறுகிய காலத்திலேயே அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற தனது தம்பியின் திருமண விழாவில் எடுத்த கல்யாண வீடியோ அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகலக்ள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.