கிடைத்தது கோல்டல் விசா... - பறக்கும் போது மதுவில் மிதந்த அமலாபால் - ரசிகர்கள் அதிர்ச்சி

cinema viral photo amalapal shocking fans
By Nandhini Dec 31, 2021 05:24 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். சமீபத்தில் துபாய் அரசால் இந்திய சினிமா கலைஞர்கள் பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.

தமிழ், மலையாளர் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பல நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. தமிழில் நடிகை த்ரிஷா, நடிகர் பார்த்திபன் ஆகியோர் கோல்டன் விசா பெற்றார்கள்.

சமீபத்தில் நடிகை அமலா பாலுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது. விசா வழங்கிய ஓரிரு நாட்களுக்கு முன்பு தான், அந்த மகிழ்ச்சியை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

பகிர்ந்து விட்டு விமானத்தில் பறந்த போது, பயணத்தில் புதுவித சர்ச்சை கிளம்பியுள்ளது. விமானத்தில் முதல்தர பிசினஸ் இருக்கையில் பயணித்த அமலா பால், பச்சை நிற ஆடையோடு பளிச்சென தன் இருக்கையில் அமர்ந்துள்ளார்.

பின்னர், சிறிது நேரத்தில் விமானப் பணிப்பெண், அவரிடம் மதுபானம் வேண்டுமா என கேட்க, அவரும், ‛ஓகே’ சொல்ல, வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், மதுவை குடித்து மிதந்து கொண்டிருந்திருக்கிறார் அமலா பால். மது உள்ளே சென்ற பின், அவரது ஆடை குறைந்து, கிளாமர் மோட் திரும்பியுள்ளார்.

அந்த விமானத்தின் உள்அமைப்பே, விண்வெளி போன்று தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். குளுகுளு சூழலில், கையில் குவளையோடு குதூகலமாய் அமர்ந்திருந்த அமலாவிற்கு, மனம் நிறைய மகிழ்ச்சி. கோல்டன் விசா கிடைத்த மகிழ்ச்சியை அவர் அனுபவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் புகைப்படத்தை வெளியிட்டதும், சிலர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். மது குடிப்பதை இவ்வளவு பட்டவர்த்தனமாக எப்படி வெளியிடலாம் என்று சராமரியாக கமெண்ட் செய்து வருகிறாகள் நெட்டிசன்கள்.