உங்கள் யாருக்கும் உரிமை கிடையாது.. இஷ்டப்படி வாழ விடுங்க... - கடுப்பில் ரசிகர்களை விளாசிய அமலாபால்!
சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அமலா பால். இவர் நடிப்பில் வெளிவந்த மைனா இவருக்கு வெற்றியையும், புகழையும் கொடுத்தது.
இதனையடுத்து, அமலாபால் விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதனையடுத்து, காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு சிறிது மாதத்திலேயே கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். இதன் பிறகு, சினிமாவில் நடிப்பதை தொடர்ந்தார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் கடற்கரையின் அருகே பிகினி உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
எப்போதும் ரசிகர்களின் எதிர்மறையான கருத்துக்களை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் இவர் இந்த புகைப்படத்திற்கு வந்த கருத்துக்களை பார்த்து ரசிகர்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.
அந்த பதிலடியில், ஒரு பெண்ணின் உடையை பற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. பெண்களைக் குறி வைப்பதை நிறுத்தி விடுங்கள், அவர்களின் இஷ்ட படி வாழ விடுங்கள் என்று ரசிகர்களை விளாசி இருக்கிறார்.