'வலிமை' படத்தின் Exclusive Stills - வேற லெவலில் ட்ரெண்டிங் - டுவிட்டரில் தெறித்து விடும் ரசிகர்கள்

cinema-ajith-valimai
By Nandhini Oct 06, 2021 10:45 AM GMT
Report

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ரசிகரகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 2022 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் தெரிவித்தார்.

இதனையடுத்து நீண்ட நாட்களாக அப்டேட் இல்லாமல் இருந்தததால் தற்போது வலிமை குறித்து வரும் அனைத்து அப்டேட்களும் ட்ரெண்டாகி விடுகிறது. இந்நிலையில், வலிமை படத்தின் Exclusive Stills வெளியாகியுள்ளது.