தீபாவளியை சிறப்பாக கொண்டாடிய அஜித் - ஷாலினி - வைரலாகும் புகைப்படம்
நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதி தீபாவளி கொண்டாடிய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் - ஷாலினி. இவர்கள் அமர்க்களம் படத்தில் ஒன்றாக நடித்தபோது, இவர்களிடையே காதல் மலர்ந்தது.
இதனையடுத்து, கடந்த 2000ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். அவர் மனைவியுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் வேட்டி சட்டையுடன் மனைவி ஷாலினியுடன் உள்ளார்.
இதோ அந்த புகைப்படம் -