வாகா எல்லையில் செம்ம மாஸா வந்த தல அஜித் - ரசிகர்கள் டுவிட்டரில் தெறிக்கவிட்ட புகைப்படங்கள்

cinema-ajith-photo-viral
By Nandhini Oct 20, 2021 02:59 AM GMT
Report

தல அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் அஜித் ரசிகர்களுக்காக மறைமுகமாக ஏராளமான உதவி செய்து வருகிறார்.

தற்போது, H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு முடித்து விட்ட களைப்பில் வீட்டில் படுத்து தூங்காமல் குஷியாக பைக்கை எடுத்து ஊர்சுற்ற கிளம்பி விட்டார் நடிகர் அஜித்.

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன், வெளியான வலிமை படத்தின் பாட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனையடுத்து, அவ்வப்போது ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் அஜித் தற்போது வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாகா எல்லையில் தல என்ட்ரி கொடுத்த வீடியோவும், ராணுவ வீரர்களுடன் எல்லையில்லா அன்பை பொழிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.