Sunday, Jul 20, 2025

சிலம்பம் சுற்றி மாஸ் காட்டிய நடிகை ஆதா சர்மா - வைரலாகும் வீடியோ - குவியும் பாராட்டு

cinema adah sharma silambam video viral
By Nandhini 4 years ago
Report

நடிகை ஆதா சர்மா தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமாக வலம் வருகிறார்.

தமிழில், ‘இது நல்ல ஆளு’ படத்தில் ‘மாமன் வெயிட்டிங்’ பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

சமீபத்தில், வெளியான ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் ‘ஐ வான்ட் டு மேரி யூ மாமா’ என கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.

தற்போது, இந்தியில் கமாண்டோ 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆதா சர்மா. சமூக வலைத்தளத்தை தனது கவர்ச்சி புகைப்படத்தை அவ்வப்போது வெளியிட்டு வந்த ஆதா ஷர்மா, பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது, ஆதா ஷர்மா சிலம்பம் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.