மீண்டும் ரசிகர்களை வாய்பிளக்க வைத்த தமன்னா!

Tamannaah Tamil Cinema Jailer
By Vidhya Senthil Jul 27, 2024 05:38 PM GMT
Report

ஸ்ட்ரீ 2 படத்தில் ஆஜ் கி ராத் என்ற பாடலில் தம்மனா சிறப்பு தோற்றத்தில் கிளாமர் நடனம் ஒன்றை ஆடியுள்ளார்.

தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் நடிகை தமன்னா அறிமுகமானர் . ஆனால் இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. பின்னர் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கல்லூரி திரைப்படத்தில் நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.

tamana

இப்படத்தில் தமன்னாவின் நடிப்பை பலராலும் பாராட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக நடிகை தமன்னா உருவெடுத்தார். மேலும் தமிழ் மட்டுமின்றி, மலையாளம் ,தெலுங்கு, ஹிந்தி,கன்னடா உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்திருக்கிறார்.

நடித்தால் ஹீரோயினாக மட்டும் நடிப்பேன் என இல்லாமல் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடலுக்கு நடனம் ஆடவும் தமன்னா தயக்கம் காட்டியதில்லை. அந்த வகையில் நடிகை தமன்னா நடனம் ஆடிய கேஜிஎஃப் 1, ஜெயிலர் போன்ற படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்தது.

காவாலாவுக்கு தமன்னா நடனம் - காதலர் என்ன சொன்னார் தெரியுமா?

காவாலாவுக்கு தமன்னா நடனம் - காதலர் என்ன சொன்னார் தெரியுமா?

நடிகை தமன்னா

 சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் முத்த காட்சிகள், நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறி வந்த தமன்னா, அண்மைக் காலமாக கவர்ச்சியில் தோன்றி வருகிறார். அண்மையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.

மீண்டும் ரசிகர்களை வாய்பிளக்க வைத்த தமன்னா! | Cinema Actress Tamannaah Glamour Dance

இந்த பாட்டு சிறுவர்கள் முதல் பெரியர்வகள் வரை முணுமுணுக்க செய்தது. அது மட்டுமில்லாமல் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படத்தில் அச்சச்சோ பாடலுக்கு படுகவர்ச்சியில் தமன்னா நடனம் ஆடியிருப்பார்.

மீண்டும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க செய்தது. இந்த நிலையில், தற்போது வருண் தவான், பங்கஜ் திரிபாதி, ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா காப்போர் மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஸ்ட்ரீ 2 படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஆஜ் கி ராத் என்ற பாடலில் தம்மனா சிறப்பு தோற்றத்தில் கிளாமர் நடனம் ஒன்றை ஆடியுள்ளார்.

இந்த பாடலில் தமன்னாவின் உடை டான்ஸ் மூவ்ஸ் அனைத்தையும் பார்க்க அப்படியே காவலா பாடலை நினைவுபடுத்துகிறது என்று சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.\ மேலும் இந்த படத்தினை காண ரசிகர்கள் காத்துவருகிறனர்.