கோலாகலமாக தொடங்கியது சீரியல் நடிகை நக்ஷத்ராவின் திருமண கொண்டாட்டம்

marriage cinema actress-nakshatra-
By Nandhini Dec 06, 2021 07:15 AM GMT
Report

சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக அறிமுகமானவர்தான் நக்ஷத்ரா. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இதனையடுத்து, தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் முக்கிய நாயகியாக நடித்தார் நக்ஷத்ரா. சின்னத்திரையில் நடித்து வந்த நக்ஷத்ராவிற்கு, ராஜேஷ் என்பவரை திருமணம் செய்ய நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

தற்போது, திருமண கொண்டாட்டத்தை தொடங்கி இருக்கிறார் நக்ஷத்ரா. சில தினங்களில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ப்ரீ திருமண கொண்டாட்டம் நடந்திருக்கிறது. இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகிறது.