சக நடிகைகள் உடைமாற்றுவதை படம் பிடித்து வெளியிட்ட நடிகை குஷ்பூ மீது வழக்குப்பதிவு
சக நடிகைகள் உடைமாற்றுவதை கேமாரா மூலம் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நடிகை குஷ்பூ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தான் லாகூரை சேர்ந்த குஷ்பூ. சினிமா மற்றும் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் சக நடிகைகளுக்கும் இடையே சண்டை வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சண்டையில் அவர் நாடகத்தில் நீக்கப்பட்டிருக்கிறார். இந்த கோபத்தில் நடிகை குஷ்பூ நாடக அரங்கில் பணியாற்றும் காஷிப்கான் என்பவருக்கு 1 லட்சம் ரூபாயைக் கொடுத்து, நடிகைகள் உடைமாற்றும் அறையில் கேமாரை பொருத்தி இருக்கிறார்.
கேமாராவில் காட்சிகள் பதிவானது. இந்த காட்சிகளை அவர் வெளியிடப்போவதாக சக நடிகைகளிடம் கூறி மிரட்டி விட்டு, அந்தக் காட்சிகளை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் நடிகை குஷ்பூவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.