மஸ்கட் செல்ல முயற்சி செய்த நடிகை ஜாக்குலினை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் - நடந்தது என்ன?

cinema-actress-jacqueline
By Nandhini Dec 06, 2021 04:15 AM GMT
Report

200 கோடி ரூபாய் மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்.

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடையதாக ஏற்கெனவே ஜாக்குலினுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், மஸ்கட் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் வந்தார்.

அப்போது, அங்கு அவரை அமலாக்கத் துறையினர் அதிரடியாக தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டார்கள். இதனையடுத்து, அவரை டெல்லி அழைத்துச் சென்று அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இடையே பணப் பரிவர்த்தணை நடந்தது தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.