கடலுக்கடியில் கடல் கன்னியாக மாறிய ஆண்ட்ரியா - போட்டோ பார்த்து அசந்துபோன ரசிகர்கள்
நடிப்பு மட்டுமல்லாமல், பாடகியாகவும் திரையுலகில் ஜொலித்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. அண்மையில் புஷ்பா படத்திற்காக இவர் பாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் செம்ம வைரலானது.
நடிகை ஆண்ட்ரியா “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு”, ‘விஸ்வரூபம்’ போன்ற பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது, இவர் கைவசம் ‘மிஸ்கினி பிசாசு 2’ படம் உள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா தற்போது ஒரு ‘பேண்டஸி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். துப்பாக்கி முனை படத்தின் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் இப்படத்தில், நடிகை ஆண்ட்ரியா கடல் கன்னியாக நடித்து வருகிறார்.
நடிகை ஆண்ட்ரியா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடல் கன்னி கெட் அப்பில் போட்டோ ஷூட் நடத்தினார். அதைப்பார்த்து அவரை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதற்காக தி-நகரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
அடுத்தமாதம் ஷூட்டிங்கை முழுவதுமாக முடித்து படத்தை கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
தற்போது கடலுக்கடியில் கடல்கன்னியாக மாறிய ஆண்ட்ரியாவின் போட்டோஷூட் புகைப்படம் வைரலாகி வருகிறது.