நடிகர் விஜய்யின் ஒரிஜினல் ஹேர் ஸ்டைல் அம்பலம் - புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்

cinema actor-vijay hair-style actor-sathish
By Nandhini Dec 21, 2021 08:37 AM GMT
Report

விஜய்யுடன் காரில் சென்றபோது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் நகைச்சுவை நடிகர் சதீஷ். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்த ப்ரண்ட்ஷிப் படத்தில் நடிகர் சதீஷ் நண்பனாக நடித்திருந்தார்.

இந்நிலையில், தான் காரில் சென்ற புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டார் ஹர்பஜன் சிங். அதை பார்த்த நடிகர் சதீஷோ, தான் விஜய்யுடன் காரில் பயணம் செய்தபோது எடுத்த செல்ஃபியை வெளியிட்டு இது தான் என் பெஸ்ட் ரைடு என்று பதிவிட்டிருந்தார்.

நடிகர் சதீஷ் வெளியிட்ட இப்படம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கு காரணம் விஜய்யின் ஹேர்ஸ்டைலாகும்.

இந்நிலையில், சதீஷின் டுவிட்டரை பார்த்தவர்கள் கூறுகையில், இப்புகைப்படத்தை வெளியிட விஜய்யிடம் அனுமதி பெற்றீர்களா? விஜய் அண்ணாவின் ஒரிஜினல் ஹேர்ஸ்டைல் புகைப்படத்தை வெளியிட்டதற்கு நன்றி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.