'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்திற்காக லண்டன் பறந்த நடிகர் வடிவேலு - வைரலாகும் புகைப்படம்
'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் இசை பணிகளுக்காக படக்குழுவினர் லண்டன் பறந்து சென்றிருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ரீஎன்ட்ரி கொடுத்துள்ளதால், சில படங்களில் அவர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் வடிவேலு. இப்படத்திற்கு முதலில் 'நாய் சேகர்' என்ற தலைப்பு வைக்க திட்டமிட்டப்பட்டது. ஆனால், நாய் சேகர் என்ற தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் வைத்துள்ளனர். எனவே படத்திற்கு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பணிகள் பூஜையுடன் துவங்கி உள்ளன. படத்தில் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இசைப் பணிகளைத் துவங்குவதற்காக படக்குழுவினர் லண்டன் பறந்து சென்றிருக்கிறது.
நடிகர் வடிவேலு மற்றும் சுராஜ் லண்டனில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.