100 கோவில்களில் வேண்டுதல் செய்த சிம்பு - இதற்காகத்தானாம்...

cinema actor simbhu 100 temple
By Nandhini Dec 25, 2021 07:53 AM GMT
Report

கொரோனா ஊரடங்கில் மட்டும் சுமார் 100 கோவில்களுக்கு சென்று வேண்டுதல் செய்துள்ளேன் என சிம்பு தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாத்துறையில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துக்கு பின் குறிப்பிடத்தக்க வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சிம்புவுக்கு, மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.

இப்படத்தின் வெற்றிக்கு சிம்பு அறிக்கை மூலம் ரசிகர்களுக்கும், பத்திரியாகையாளர்கள், மற்றும் படக்குழு உள்ளிட்ட அனைவருக்குமே தன்னுடைய நன்றிகளை தெரிவித்திருந்தார். தற்போது இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும், 'வெந்து தணிந்த காடு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு பேசுகையில், அம்மா, அப்பாவை இனி பஞ்சாயத்தில் இழுத்து விடக்கூடாது. தங்கை கிறிஸ்டின், தம்பி முஸ்லீம், நான் இந்து என்பதால் வெள்ளிக்கிழமை தர்ஹா, ஞாயிறுன்னா சர்ச், மத்த நாள்களிலும் கோயிலுக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். கொரோனா ஊரடங்கில் மட்டும் சுமார் 100 கோவில்களுக்கு சென்று வேண்டுதல் செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

100 கோவில்களில் வேண்டுதல் செய்த சிம்பு - இதற்காகத்தானாம்... | Cinema Actor Simbhu 100 Temple