புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த நடிகர் ஷிஹான் ஹுசைனி - கடைசியில் நடந்த சம்பவம்!
பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.
ஷிஹான் ஹுசைனி
மதுரையை பூர்விமாக கொண்ட ஷிஹான் ஹூசைனி கமல் நடித்த புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமானார். இவர், பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த பத்ரி படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தார்.
இதுவரை 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாகவும் இருக்கிறார். கடந்த 2022இல் வெளியான காத்துவாக்குல 2 காதல் படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
புற்றுநோய்
இந்நிலையில் தன் உடல்நிலை நடிகர் ஷிஹான் ஹுசைனிதனக்கு இரத்தப் புற்றுநோய் மற்றும் அப்லாஸ்டிக் அனீமியா இருப்பதாக கூறினார். தனக்கு தினமும் இரண்டு யூனிட் ரத்தம் தேவைப்படுவதாகவும், தனது மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க தனது பயிற்சி மையத்தை விற்க முடிவு செய்துள்ளதாகவும் ஹுசைனி தெரிவித்தார்.
இதையடுத்து அவருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் உதவி செய்யப்பட்டது. ஆனால் நடிகர் ஷிஹான் ஹுசைனி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். உயிரிழப்பை அவர் வலைதளம் மூலமாக அவரின் குடும்பம் உறுதி செய்துள்ளது.
அதில், "ஹூசைனி நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் உடல் மாலை வரை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லமான ஹை கமாண்டில் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.