காளியம்மாளைக் தனது கட்சியில் இணைய அழைப்பு விடுத்த நடிகர் - நீங்க நினைத்தவர் இல்லை.. யார் அது?
நாதக கட்சியிலிருந்து விலகிய காளியம்மாளைக் தனது கட்சியில் இணைய பிரபல நடிகர்அழைப்பு விடுத்துள்ளார்.
பிரபல நடிகர்
நாம் தமிழர் கட்சியில் பெண்கள் பாதுபாப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இருந்த காளியம்மாள் கட்சியில் இருந்து விலகினார். மேலும் அவர் திமுகவில் இணையலாம் எனவும் பேசப்படுகிறது.இந்த நிலையில், தனது கட்சியில் இணைய காளியம்மாளுக்கு பிரபல நடிகர்அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து விரிவாக பார்க்கலாம். கரூரில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், எனக்கு ஒரு கட்சி உள்ளது.அதன் பெயர் சிஎஸ்கே கட்சி என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.அதற்கு கூல் சுரேஷ்தமிழக வெற்றி கழகம் அல்ல திமுக, அதிமுக, பாஜக, பாமக எந்த கட்சியாக இருந்தாலும், மக்களுக்காக உழைப்பதற்காக கூல் சுரேஷ் கட்சி காத்துக் கொண்டுள்ளேன்.
காளியம்மாள்
எந்த கட்சி கூட வேணாலும் கூட்டணி சேர்ந்து கொள்ளத் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.அப்போது நாதக கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் கூல் சுரேஷ் கட்சியில் இணையப் போவதாக ஒரு தகவல் வெளியானது.
எங்கள் கட்சியில் காளியம்மாள் இணையக் கூடாதா? என்று கேள்வி எழுப்பியவர் காளியம்மாள் மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்தாலும் கூட சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிப்பேன் என்று கூறியுள்ளார்.