நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி

cinema-actor- arjun-corona
By Nandhini Dec 14, 2021 03:00 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் அர்ஜூனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்ற ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர்தான் நடிகர் அர்ஜுன்.

இவர் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி உள்பட மொழிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிலையில், நடிகர் அர்ஜுனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இது குறித்து நடிகர் அர்ஜுன் தனது இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்போது தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் , தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும். அனைவரும் மாஸ்க் அணிவதை மறக்க வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நடிகர் கமல் ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில் தற்போது பிரபல நடிகரான அர்ஜூனுக்கு தொற்று உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி | Cinema Actor Arjun Corona