பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி

actor- admitted-to-hospital
By Nandhini Dec 03, 2021 06:54 AM GMT
Report

கன்னட நடிகரும், தயாரிப்பாளருமான சிவராம் மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல கன்னட நடிகர் சிவராம். இவர் நாடகங்களில் நடித்து வந்தவர்.

பிரபல இயக்குநர்கள் சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ், புட்டண்ண கனகல் உட்பட சிலரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். பிறகு, 1965-ம் ஆண்டு ‘பெரத ஜீவ’ என்ற கன்னட படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு, கதாநாயனாகவும், குணசித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழில் ரஜினிகாந்த், கவுதமி நடித்து சூப்பர் ஹிட்டான ‘தர்மதுரை’ படத்தை தயாரித்தவர் இவர்தான்.

அந்தப் படத்திலும் இவர் நடித்திருக்கிறார். அமிதாப்பச்சன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த இந்தி படமான கிரப்தார் படத்தையும் இவர் தயாரித்திருக்கிறார். ஐயப்பன் மாலை போட்ட இவர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பூஜையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, சுய நினைவு இல்லாமல் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தீவிர சிகிச்சையில் இருக்கும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி | Cinema Actor Admitted To Hospital