வெளியான முதல் நாளே வசூலை வாரி அள்ளிய ‘மாநாடு’ - எவ்வளவு கோடின்னு தெரியுமா?
cinema
By Nandhini
நடிகர் சிம்பு நடிப்பில் நேற்று வெளியான படம் மாநாடு. இப்படத்திற்கு வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
இப்படம் பல தடைகளை தாண்டி திரைக்கு வந்துள்ளது. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பல வருடங்கள் கழித்து சிம்புவின் படம் மாஸ் காட்டியுள்ளதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது ‘மாநாடு’ திரைப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூலாகி இருப்பதாகவும், சென்னையில் 88+ லட்சத்திற்கும் மேல் வசூலாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.