உயிருக்கு போராடும் சிவசங்கர் மாஸ்டர் - சிகிச்சைக்கு நான் நிதியுதவி அளிக்கிறேன் - சோனு சூட் உறுதி

1 week ago

நடன இயக்குநர் சிவசங்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் இதுவரை தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

தனுஷின் ‘திருடா திருடி’ படத்தில் இடம்பிடித்த ‘மன்மதராசா’ பாடலுக்கும் நடனம் அமைத்து பட்டித்தொட்டி எங்கும் மாபெரும் புகழ் பெற்றார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிவசங்கர் மாஸ்டர், தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இவரது மருத்துவ சிகிச்சைகளுக்கு போதிய பணம் இல்லாததால், அவரது மகன் அஜய் கிருஷ்ணா திரை பிரபலங்கள் உதவுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். நடன இயக்குநர் சிவசங்கர் சிகிச்சைக்கு சோனு சூட் உதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்