2 ஓடிடி தளங்களில் வெளியான ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம்

1 week ago

ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் 2 ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் ‘அண்ணாத்த’.

இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 4ம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. 'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

‘அண்ணாத்த’ படம் இதுவரை 200 கோடிக்கு மேல் உலகம் முழுக்க வசூல் சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை படத்தை தயாரித்த சன் நெக்ஸ்ட் நிறுவனமும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து, 20 நாட்கள் கழித்து இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ‘அண்ணாத்த’ படம் வெளியாகி இருக்கிறது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்