நடிகர் விஜய் பெற்றோரை சந்தித்து உரையாடினார் நடிகர் விஷால்
நடிகர் விஜய்யின் பெற்றோரை சந்தித்து நடிகர் விஷால் உரையாடி இருக்கிறார். விஷால் நடிப்பில் கடைசியாக கடந்த தீபாவளியையொட்டி ‘எனிமி’ திரைப்படம் வெளியானது.
இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக வரும் ஜனவரி 26ம் தேதி ‘வீரமே வாகை சூடும்’ படம் வெளியாக இருக்கிறது. நேற்று இப்படத்தை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அடுத்ததாக, ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்குகிறார் நடிகர் விஷால். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘விஷால் 33’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பெங்களூரில் குடும்ப விழா ஒன்றில் நடிகர் விஷால், நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபாவை சந்தித்து உரையாடி இருக்கிறார்.
வித்தியாசமான தலைப்பாகையுடன் விஷாலும், எஸ்.ஏ சந்திரசேகரும் ஷோபாவுடன் உற்சாகமுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.