ரத்தம் தெறிக்க விஜய் சேதுபதி படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த கெளதம் மேனன்

cinema
By Nandhini Nov 22, 2021 08:23 AM GMT
Report

விஜய் சேதுபதி, சுந்தீப் கிஷான் நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் வில்லனாக கெளதம் மேனன் நடித்து வருகிறார்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எனும் சென்சேஷனல் காதல் ரொமேன்டிக் ஹிட் கொடுத்த இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்ததாக விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ‘மைக்கேல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் இன்னோர் நாயகனாக தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷான் நடிக்கிறார்.

இவர் ‘மாநகரம்’ படத்தில் இன்னோர் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் ஆக்சன் படமாக உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் வில்லனாக கெளதம் மேனன் நடிக்கிறார். இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. கையில் ரத்தம் தெறிக்க ஒரு போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் கெளதம் மேனனை வரவேற்கிறோம் என்று அவர் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். 

ரத்தம் தெறிக்க விஜய் சேதுபதி படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த கெளதம் மேனன் | Cinema

ரத்தம் தெறிக்க விஜய் சேதுபதி படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த கெளதம் மேனன் | Cinema