இயக்குனர் ஞானவேல் மிகச் சரியாகத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் – சீமான்

cinema
By Nandhini Nov 22, 2021 04:58 AM GMT
Report

தாமதமாக வெளிவந்தாலும் மிகச்சரியாகத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து, ‘ஜெய்பீம்’ பட சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று சீமான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ‘ஜெய்பீம்’. இப்படம் அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல பாராட்டையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

ஆனால், இப்படத்தை குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் இருந்ததால், இப்படத்தின் இயக்குனர் ஞானவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இது குறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘ஜெய் பீம்’ படம் குறித்தான தம்பி ஞானவேல் அவர்களின் கடிதம் கண்டேன். தாமதமாக வெளிவந்தாலும் மிகச்சரியாகத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து, இச்சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். சமூகப் பதற்றத்தையும், சச்சரவையும் தணிக்கும் விதமாக சமூகப்பொறுப்புணர்வோடும், மிகுந்த முதிர்ச்சியோடும் அணுகிய இம்முறை வரவேற்கத்தக்கது. ஆகவே, இச்சிக்கலை இத்தோடு கைவிட்டு, இனியும் இப்படத்தின் சிக்கலை ஒட்டுமொத்தச்சமூகத்தின் சிக்கலாக நீடிக்கச்செய்யாது, சமூக அவலங்களுக்காகக் குரலெழுப்பி, மக்களின் துயர்போக்கக் போராடவும், ஆக்கப்பூர்வப்பணிகளில் கவனம் செலுத்தவும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.