"அறிவுக்கே பிறந்த இனிய எதிரிகள்" - ஹேக்கான பேஸ்புக் - நடிகர் பார்த்திபனின் டுவிட்

cinema
By Nandhini Nov 21, 2021 11:34 AM GMT
Report

சிறிது காலமாகவே பிரபலங்களின் பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளை மர்ம நபர்கள் ஹேக் செய்வது வாடிக்கையாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன் நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அவர் போட்ட 1 லட்சத்து 59 ஆயிரம் டுவீட்கள் ஒரே நாளில் மாயமாகின. இதனையடுத்து, சென்னை சைபர் கிரைம் போலீசார் ஹேக்கர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து குஷ்புவின் டுவிட்டர் ஐடியை மீட்டுக்கொடுத்தனர்.

அந்த வகையில் தற்போது நடிகர் பார்த்திபனின் பேஸ்புக் கணக்கை ஹேக்கர்கள் ஹேக் செய்திருக்கிறார்கள்.

இது குறித்து நடிகர் பார்த்தின் டுவிட்டர் பக்கத்தில், "என் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம். அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம். ஆனால் அறிவுக்கே பிறந்த சில இனிய எதிரிகள் ஹேக் செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் கொள்ள சற்றே நேரம் தேவை. அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.