முதன் முதலாக தன் குழந்தையை வெளி உலகத்திற்கு காட்டிய வெண்பா - வைரல் புகைப்படம்

cinema
By Nandhini Nov 21, 2021 10:11 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் விறு விறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் சின்னத்திரை நடிகை ஃபரினா.

இவர் திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த நிலையில் கர்பமானபோதும் இடைவிடாமல் நடித்து வந்தார். பலரும் இவரின் இந்த டெடிகேஷனை பார்த்து வியந்தனர்.

டெலிவரிக்காக மருத்துவமனையில் அனுமதியானது முதல்கொண்டு தங்களின் ரசிகர்களுக்கு அப்டேட் செய்திருந்த ஃபரினா-ருபைத் தம்பதியினருக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இவரது ரசிகர்கள் ஏதோ ஒரு குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு இதுதான் ஃபரினாவின் குழந்தை என்ற பொய்யான தகவலை பகிர்ந்து வந்த வண்ணம் இருந்தனர்.

இதனால் கோபமடைந்த ஃபரினா-ருபைத் எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தங்களது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கின்றனர். தற்போது இந்த புகைப்படம் தான் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.