பெற்றோர்கள் முன்னிலையில் ‘ராஜா ராணி 2’ சித்துக்கு திருமணம் முடிந்தது
நிறைய பிரபலங்கள் தங்களுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளை திருமணம் செய்துக்கொண்டு நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகிறார்கள்.
அதே வகையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ‘திருமணம்’. அந்த சீரியலில் பிரபல சீரியல் நடிகர்களாக சித்து மற்றும் ஸ்ரேயா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்கள்.
இந்த சீரியல் மூலம் இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. தங்களின் காதலை சமீபத்தில் இருவரும் அறிவித்தனர். பொதுவெளியிலும் இவர்கள் இருவரும் ஜோடியாக வலம் வந்தனர். இவர்களின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், சித்து மற்றும் ஸ்ரேயா ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தற்போது சித்து - ஸ்ரேயா ஜோடியின் திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.