நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு இரட்டை குழந்தைகள் - ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.
1988ம் ஆண்டு வெளியான 'தில் சே' படத்தின் மூலம் பாலிவுட் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த காதலரான ஜீன் குட் இனாஃப் என்பவரை திருமணம் செய்தார். இதனையடுத்து, படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் ப்ரீத்தி ஜிந்தா. ஆனால், சிறப்புத் தோற்றங்களில் மட்டும் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது அவருக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ''அனைவருக்கும் வணக்கம், இன்று உங்கள் அனைவருடனும் அற்புதமான செய்தியைப் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். ஜெய் ஜிந்தா குட் எனாஃப் மற்றும் கியா ஜிந்தா குட் எனாஃப் ஆகியோரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் ஜீனும் நானும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் எங்கள் வாடகை தாயிற்கு மனமார்ந்த நன்றி'' என்று பதிவிட்டுள்ளார்.