அடேங்கப்பா... கர்நாடகாவில் ‘அண்ணாத்த’ படத்திற்கு இத்தனை கோடி வசூலா?
ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் கர்நாடகாவில் மட்டும் ரூ.11 கோடி வசூலை அள்ளியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘அண்ணாத்த’. இப்படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியானது.
இப்படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்கியுள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், படம் உலகம் முழுக்க 225 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது ‘அண்ணாத்த’ படம். இதில், கர்நாடகாவில் மட்டும் கடந்த இரண்டு வாரங்களில் 11 கோடி ரூபாயும், தெலுங்கில் 8 கோடி ரூபாய்யும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கர்நாடகாவில் ‘அண்ணாத்த’ தமிழிலேயும், தெலுங்கில் ‘பெத்தண்ணா’ என்ற பெயரிலும் இப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.