இன்று நயன்தாரா பிறந்தநாள் - வெளியாக உள்ள புதிய படத்தின் அப்டேட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பராகவும் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் திரைத் துறையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து கதாநாயகி நடித்து வருகிறார்.
அனைத்து முன்னணி ஹீரோக்களோடும் ஜோடியாக நடித்துள்ள பெருமையை இவர் பெற்றுள்ளார். தற்போது, காதலர் விக்னேஷ் சிவனுடன் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களையும் தயாரித்து வருகிறார்.
இன்று நயன்தாராவின் பிறந்தநாள். எனவே அவர் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இந்த புதிய படத்தை இயக்க இருக்கிறார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளது.
நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.