நான் சேமித்து வைத்த அனைத்தையும் புனீத் பணியைத் தொடர செலவு செய்வேன் - நடிகர் விஷால்

cinema
By Nandhini Nov 18, 2021 04:51 AM GMT
Report

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய மறைவு அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது. 

புனீத் பல சேவைகளையும் செய்து வந்தார். அதில் ஒன்று 1800 மாணவர்களை இலவசமாகப் படிக்க வைத்து வந்தது. இந்நிலையில், புனீத் மறைவையடுத்து, அந்த 1800 மாணவர்களின் படிப்பை இனி தான் கவனித்துக் கொள்வதாக விஷால் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விஷால் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் பேசுகையில், "16 வருடங்களாக நடிகராக இருந்தும் எனக்கு சென்னையில் சொந்த வீடு கிடையாது. பெற்றோருடன் தான் வசித்து வருகிறேன். ஆனால் நான் எனக்காக ஒரு வீட்டிற்காக பணத்தை சேமித்து வருகிறேன், இந்த சேமிப்பை புனித் ஆதரவளித்த குழந்தைகளுக்காக செலவிடுவேன்.

புனித் இறக்கும் வரை பல சமூக நல்ல பணிகளைச் செய்து கொண்டிருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. அவரது நற்செயல்கள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. எனவே தான், நான் புனித்தின் பணியைத் தொடர விரும்பி முன்வந்துள்ளேன். அவரது ஆன்மா சாந்தியடைய நான் முழு மனதுடன் பிரார்த்தனை செய்கிறேன் என்றார். 

நான் சேமித்து வைத்த அனைத்தையும் புனீத் பணியைத் தொடர செலவு செய்வேன் - நடிகர் விஷால் | Cinema

நான் சேமித்து வைத்த அனைத்தையும் புனீத் பணியைத் தொடர செலவு செய்வேன் - நடிகர் விஷால் | Cinema