குழந்தை பெற்ற பிறகு மருத்துவமனையிலிருந்து பரீனா வெளியிட்ட சூப்பர் புகைப்படம் வைரல்
பாரதி கண்ணம்மா சீரியலின் படு ஸ்ட்ராங்கான வில்லியாக நடித்து வருபவர் பரீனா. வெண்பா என்ற வேடத்தில் நடித்து மக்களின் மனதில் நின்றுவிட்டார்.
இந்த சீரியலில் இவர் செய்யும் வில்லித்தனத்தால் மக்களிடம் நிஜமாகவே சில திட்டுக்களை வாங்கியிருக்கிறார், கர்ப்பமாக இருந்தாலும் சீரியலில் இருந்து விலக கூடாது என்று குழந்தை பிறக்கும் வரை நடித்து வந்தார்.
இப்போது அவர் ஜெயிலில் இருப்பது போல் காட்டி வருகிறார்கள், இந்த நேரத்தில் பரீனாவிற்கு குழந்தையும் பிறந்துவிட்டது. தனக்கு மகன் பிறந்திருக்கிறான் என்று சந்தோஷமாக நேற்று செய்தி வெளியிட்டார்.
அவருக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வந்தார்கள். இன்று பரீனா தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். தனக்கு நார்மல் டெலிவரி தான் ஆனது என்றும் குறிப்பிட்டுள்ளார்.