உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த ரஜினியின் ‘அண்ணாத்த’ - எவ்வளவு கோடின்னு தெரியுமா?

cinema
By Nandhini Nov 16, 2021 09:01 AM GMT
Report

ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘அண்ணாத்த’. இப்படம் உலகம் முழுவதும் ரூ.225 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடித்த படம் 'அண்ணாத்த'. இப்படம் தனியார் நிறுவனம் தயாரித்தது. தீபாவளி அன்று வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.225 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

படம் நேற்று ஒருநாள் மட்டும் ரூபாய் 7.14 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இது தொடர்பாக சினிமா வர்த்தக ஆய்வாளர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில், 'முதல் வாரம் - 202.47 கோடி. இரண்டாவது வாரம்: முதல்நாள் - 4.05 கோடி, இரண்டாவது நாள் - 4.90 கோடி, மூன்றாவது நாள் - 6.21 கோடி, நான்காவது நாள் - 7.14 கோடி, மொத்தம் இதுவரை - 224.77 கோடி ரூபாய் வசூலித்துள்ளது' என பதிவிட்டு தெரிவித்துள்ளார்.