‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ கிராண்ட் பினாலே - டைட்டிலை வென்ற பிரபல போட்டியாளர்கள்
காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலேவில் டி.எஸ்.கே மற்றும் சுனிதா ஜோடி வின்னர் பட்டத்தை வென்றுள்ளனர்.
விஜய் டிவியில் தற்போது ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி 'காமெடி ராஜா கலக்கல் ராணி'. இந்நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு காமெடியன்கள், அழகிய சீரியல் நடிகைகளுடன் சேர்ந்து காமெடி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று கோலகலமாக நடந்தது. இதில் நடிகர் ஜீவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 10 ஜோடி போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவியது.
இதற்கிடையில், டி.எஸ்.கே காமெடி ராஜாவாகவும், சுனிதா கலக்கல் ராணியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டித் தூக்கிய டி.எஸ்.கே மற்றும் சுனிதாவுக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.