செம்பருத்தி சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் - டுவிட்டரில் வெளியான பதிவு

cinema
By Nandhini Nov 11, 2021 09:35 AM GMT
Report

ஜீ தமிழ் சேனலில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவிற்கு இந்த சீரியல் ஹிட்டடித்துள்ளது.

ரசிகர்களை பெரிதும் கவர்ந்த செம்பருத்தி சீரியலில் நடிகை ஷபானா கதாநாயகியாக இத்தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யன் என்கிற வேலு லட்சுமணன் இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஷபானா அதை தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " நிறைய பேர் கேட்டுக் கொண்டே இருந்தீர்கள் எப்போது கல்யாணம்? எப்போது கல்யாணம்? என்று. அப்படி ஒரு விஷயம் நடக்கும்போது அதை நானே சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன். இன்று எனது வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷலான ஒரு நாள். என்னுடைய திருமணம். சென்னையில் வந்து வேலை செய்து இங்கேயே செட்டில் ஆவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எல்லாம் முடித்துவிட்டு திரும்ப ஊருக்கு போக வேண்டும் என்ற மன நிலையில் தான் இருந்தேன். ஆனால் தற்போது சென்னையில் செட்டிலாக முடிவு செய்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் காதலரோடு இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.