புனித் என்றென்றும் போற்றப்படுவார் - நினைவிடத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

cinema
By Nandhini Nov 10, 2021 05:59 AM GMT
Report

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் உதயநிதி அஞ்சலி செலுத்தினார். கன்னட திரையுலகில் சூப்பராக வலம் வந்த நடிகர் புனித் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் தென்னிந்தியாவில் கன்னடம் தவிர, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்திருக்கிறார். ரசிகர்களின் பேரன்பை பெற்ற இவரின் மறைவு இந்திய சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று நேற்று அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், முத்தமிழறிஞர்-கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் குடும்பங்களுக்கு இடையேயான நட்பின் தொடர்ச்சியாக புனித் அவர்கள் இருந்தார். அவரின் மரணம் பேரதிர்ச்சியை தந்தது. பெங்களூருவில் அவரின் நினைவிடத்தில் தமிழக முதல்வர், கழகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தினோம். புனித் என்றென்றும் போற்றப்படுவார் என்று பதிவிட்டுள்ளார்.