பழம்பெரும் நடிகை கோழிக்கோடு சாரதா காலமானார்
பழம்பெரும் நடிகை கோழிக்கோடு சாரதா இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த சாரதா கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சாரதா, நாடக நடிகராக நடித்து, 1979 ஆம் ஆண்டு அங்காக்குறி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
1980ம் ஆண்டுகளில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஏராளமான படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். 84 வயதான சாரதாவுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இதயநோய் சிகிச்சை பெற்று வந்த சாரதாவுக்கு நேற்று இரவு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, இவரை கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சாரதாவுக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கோழிக்கோடு சாரதாவின் மறைவிற்கு கேரளா திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.