‘ஜெய் பீம்’ படம் செம்ம சூப்பரா இருக்கிறது - புகழ்ந்து தள்ளிய சிறுத்தை சிவா

cinema
By Nandhini Nov 07, 2021 06:36 AM GMT
Report

இயக்குநர் சிறுத்தை சிவா ‘ஜெய் பீம்’ படத்தை பாராட்டி இருக்கிறார். அதோடு, சூர்யாவுடன் இணையும் படம் குறித்து அப்டேட் செய்திருக்கிறார்.

தீபாவளியையொட்டி சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியானது. இரண்டே நாளில் 100 கோடி ரூபாய்க்குமேல் வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது.

இந்நிலையில், இயக்குநர் சிறுத்தை சிவா கூறுகையில், ‘சூர்யா சாரின் ‘சூரரைப் போற்று’, ’ஜெய் பீம்’ பார்த்தேன். செம்ம சூப்பராக இருக்கிறது. இரண்டும் மிகச்சிறந்த படங்கள். மிகச்சிறந்த இயக்குநர்கள். மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் சூர்யா சார். ‘ஜெய் பீம்’ படத்தில் சூர்யா சார், மணிகண்டன் சார் அனைவரது நடிப்பும் மிகவும் பிடித்துள்ளது. அடுத்ததாக சூர்யா சாருடன் பணிபுரிய ஆவலுடன் இருக்கிறேன். அவருக்காக செம சுவாரசியமான கதை தயார் செய்திருக்கிறேன் என்றார். 

‘ஜெய் பீம்’ படம் செம்ம சூப்பரா இருக்கிறது - புகழ்ந்து தள்ளிய சிறுத்தை சிவா | Cinema