அப்படியே கண்ணம்மாவை போலவே இருக்காங்களே... இனிமே இவங்க தான் புது கண்ணம்மா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்ற சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் கதைகளம் இப்போது வித்தியாசமாகவும், விறுவிறுப்புடனும் சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த தொடரின் நாயகி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரோஷினி இந்த தொடரில் இருந்து விலக போவதாக கூறியுள்ளார்.
இதற்கு காரணம், அவருக்கு இப்போது அதிகமாக திரைபடங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வருவதாகவும், அதனால் அந்த ரோலுக்கு வேறு ஒரு நடிகையை பார்த்து கொள்ளுங்கள் என்று கூறி சென்றுவிட்டாராம்.இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தை பொருத்தவரை கருப்பு நிற கதாநாயகியாகவும், அதே சமயத்தில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் படக்குழுவினர் வடிவமைத்திருக்கிறார்கள். கண்ணம்மா தான் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்து விட்டார். அதனாலேயே தற்போது இவர் விலகுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
மேலும் இவருக்கு பதிலாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று பாரதி கண்ணம்மா குழுவினர் குழம்பி வருகின்றனர். இந்நிலையில், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகையை ஜல்லடை போட்டும், வலைவீசியும் தேடி வருகின்றனர்.
அண்மையில் கண்ணம்மா கதாபாத்திரத்தில், யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நட்சத்ராவை நடிக்க வைக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், அது அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கண்ணம்மாவை போல இருக்கும் இன்னொரு பெண்ணின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இவர்தான் இனி கண்ணம்மா சீரியல் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.